FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அஸ்ஸாமில் ரூ. 168 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

அஸ்ஸாமில் ரூ. 168 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

போதைப்பொருள் - கோப்புப்படம்
பகிர்:

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் ரூ. 168 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை அஸ்ஸாம் ரைஃபில்ஸ் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தினர் (டிஆர்ஐ) பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் கச்சார் மாவட்டம் லக்கிபூர் பகுதியில் உள்ள ஜுஜங் பஹார் என்ற இடத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரவு அஸ்ஸாம் ரைஃபில்ஸ் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, புதன்கிழமை இரவு அங்கு வந்த லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில், சுமார் ரூ.60 கிலோ எடையுள்ள 5,60,000 போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரையின் மதிப்பு ரூ. 168 கோடியாகும்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரே நடவடிக்கையில் இந்த அளவுக்கு போதப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்; மேலும், தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் லாரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள்கள் மணிப்பூரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை-37 வழியாக அஸ்ஸாமுக்கு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கை மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், கடத்தல் பாதைகளை முறியடித்து வடகிழக்கு மாநில இளைஞர்களைப் பாதுகாப்பதில் அஸ்ஸாம் ரைஃபில்ஸ் முயற்சிகளை இது உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குவஹாத்தி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் ஒன்றில் இருந்து ரூ. 2.33 கோடி மதிப்பிலான 1.168 கிலோ போதைப்பொருள்களை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) ஆகியவை இணைந்து நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

summary

Assam Rifles, in coordination with the Directorate of Revenue Intelligence (DRI), Silchar, seized a narcotics consignment worth approximately Rs 168 crore during a joint operation in Assam's Cachar district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments