அஸ்ஸாம் வெள்ளம்: பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கு ரூ.1000 கோடி தேவை! முதல்வர்
அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு குறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியது குறித்து...
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாமை சீரமைக்கவும் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காகவும் ரூ. 1000 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று (ஆக. 12) தெரிவித்தார்.
இந்த மதிப்பிடும் பணிகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அஸ்ஸாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தலைநகர் குவாஹாட்டியில் செய்தியார்களுடன் முதல்வர் பேசியதாவது:
Advertisement
Advertisement
''வெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிரந்தர நிவாரணம், உடனடி நிவாரண மதிப்பீட்டுப் பணிகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. ஆரம்பகட்ட தரவுகளின்படி, 8000 குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி சேத மதிப்பு ரூ. 150 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
இப்பணி ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை தொடரும். மாநிலம் முழுக்க 50,000 - 60,000 குடும்பங்களின் சேதங்களை ஆய்வு செய்து மதிப்பிடப்படவுள்ளது. அஸ்ஸாமின் மலைப்பிரதேச மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் சேதங்களை சரி செய்யும் புனரமைப்புப் பணிகளுக்கும் ரூ. 1000 கோடி தேவைப்படும் என நினைக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநில புனரமைப்புக்குத் தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.
அஸ்ஸாம் முழுக்க 494 அங்கன்வாடி மையங்கள் சேதமடைந்துள்ளன. இந்த மையங்களை கூடிய விரைவில் தொடங்கவுள்ளோம்'' எனக் குறிப்பிட்டார்.
Over Rs 1,000 crore likely needed for Assam flood rehabilitation: CM Himanta Sarma
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.