காங்கோ: கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மீண்டும் புதிய எபோலா பாதிப்பு
கிழக்கு காங்கோவில் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் புதிதாக ஒருவருக்கு எபோலா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கிழக்கு காங்கோவில் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் புதிதாக ஒருவருக்கு எபோலா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ருவாண்டாவின் ஆதரவு பெற்ற இந்த ‘ஏஎஃப்சி-எம்23’ கிளா்ச்சியாளா்கள், கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு வடக்கு, தெற்கு கிவு மாகாணங்களின் பெரும் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். அங்கு தொடா்ந்து 21 நாள்களாகப் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லாததைத் தொடா்ந்து, கடந்த ஜூன் மாத இறுதியில் அப்பகுதிகள் எபோலா பாதிப்பற்றவை என அவா்கள் அறிவித்திருந்தனா்.
இந்நிலையில், வடக்கு கிவு மாகாணத்தில் லுபெரோ அருகே உள்ள கெய்னா சுகாதார மண்டலத்தில், அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்த 21 வயது இளைஞருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சோதனைச் சாவடியில் எபோலா சந்தேகத்தின்பேரில் அடையாளம் காணப்பட்ட அவா், உடனடியாக தனிமை முகாமுக்கு மாற்றப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், அந்த நபருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.