FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து!

கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வின்போது ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி....

5 செப்டம்பர் 2026, 6:54 pm IST
ஜெட் விமானம். - Photo grab X video.
பகிர்:

கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வின்போது விமானப்படையின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரேக்க நாட்டின் ஏதென்ஸுக்கு வடக்கே சனிக்கிழமை நடைபெற்ற வான் சாகச நிகழ்வில் விமானப்படையின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கூடியிருந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அடர்ந்த கருப்புகை கிளம்பியது.

Advertisement

Advertisement

இருப்பினும், இதில் பார்வையாளர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்பட்டதாக உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்துக்கு முன் விமானிகள் பாராசூட் மூலம் வெளியேறினார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரையில ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த நீர் தெளிக்கும் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது.

தனக்ரா விமானப்படை தளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வான் சாகச நிகழ்வில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

A Greek air force jet crashed at an aerial show north of Athens, sending plumes of black smoke into the air before several thousand spectators on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments