10 நாள்கள் இடிபாடுகளுக்குள்... உயிருடன் மீட்கப்பட்ட நேபாள பெண்!
நேபாள பெருவெள்ளத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண் மீட்கப்பட்டது தொடர்பாக...
நேபாள பெருவெள்ளத்தில் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெட்ராபதியில் புதையுண்ட நான்கு மாடிக் கட்டடத்தின் மேல் தளத்தில் சிக்கியிருந்த 60 வயது பெண் 10 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
ஆகஸ்ட் 26ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். மீட்புப்பணி தொடர்ந்த 11வது நாளை எட்டியுள்ளது. இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5,000 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில், மீட்புப்பணி நடைபெற்றுவருகையில், நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெட்ராபதியில், நான்கு மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் வீட்டின் மேல் தளத்தில் சிக்கியிருந்த 60 வயதுடைய பெண், 10 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
பிதுர் நகராட்சி-10 பகுதியில் உள்ள வீட்டில் சந்திரிகா ஷ்ரேஸ்தா மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். ஒன்பது பேர் கொண்ட ஆயுதப் படை குழுவினரால் மீட்கப்பட்ட ஷ்ரேஸ்தா, முதலுதவி சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் திரிசூலியில் உள்ள நேபாள ராணுவத்தின் மைதிலி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அவர் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்படுவார் என நேபாளப் பிரதமரின் அலுவலகம் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Nepal floods: Woman rescued alive after 10 days trapped in debris-buried house
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.