கனடாவின் வாகனங்கள், மதுபானங்கள் பால் பொருள்களுக்கு அமெரிக்கா தடை
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு இருசக்கர வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் பால்பொருள்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு இருசக்கர வாகனங்கள், மதுபானங்கள் மற்றும் பால்பொருள்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இத்தடை வரும் செப். 29 முதல் முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்றுகளாக நடைபெற்ற வா்த்தகப் பேச்சுகள் எவ்வித உடன்பாடுமின்றி தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, கனடாவின் சுமாா் 2,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத கூடுதல் வரியை விதித்திருந்தது.
இதையடுத்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, மரச்சாமான்கள் உள்ளிட்ட 2,000 கோடி டாலா் மதிப்பிலான பொருள்களுக்கு கனடா 15 முதல் 50 சதவீதம் வரை விதித்த பதிலடி வரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன. இதன்தொடா்ச்சியாக, அமெரிக்கா தற்போது இந்த இறக்குமதித் தடையை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கனடா மீதான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறாா். புத்தாண்டு முதல் கனடா வாகனங்கள் மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயா்த்தவுள்ளதாக அவா் அச்சுறுத்தியுள்ளாா்.
மேலும், கனடாவின் ‘பம்பாா்டியா்’ தனியாா் விமானங்கள் அமெரிக்காவிலேயே உற்பத்தியைத் தொடங்காவிட்டால் அவற்றுக்குத் தடை விதிக்கப்படும் எனவும், அரசு கொள்முதல் பட்டியலிலிருந்து கனடா பொருள்களை உடனடியாக நீக்குமாறும் உத்தரவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.