காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!
காஸா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ நெருங்குவது குறித்து...
காஸாவில் தொடர்ந்து நடைபெறும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில், பாலஸ்தீனக் கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2025 அக்டோபர் மாதம் அமெரிக்க அரசின் தலைமையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், காஸாவில் உள்ள ஹமாஸ் கட்டமைப்புகளைக் குறிவைப்பதாகக் கூறி மக்கள் குடியிருப்புகள் மற்றும் அகதிகள் முகாம்களின் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காஸாவில் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் மூலம் இதுவரைக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,922 ஆகவும், படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,74,995 ஆகவும் அதிகரித்துள்ளதாக காஸாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்துடன், போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலின் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 18 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
போர்நிறுத்தம் அமலில் உள்ள காலத்தில் மட்டும் (கடந்த 2025 அக்டோபர் முதல்) 1,402 பேர் கொல்லப்பட்டதாகவும், 4,881 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் அங்குள்ள பெரும்பாலான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளின்றி சிதலமடைந்த கட்டடங்களில் உயிருக்கு ஆபத்தான வகையில் பாலஸ்தீனர்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
It has been reported that the death toll from Israel's ongoing attacks in Gaza is approaching 74,000.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.