FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவை நம்பி ரஷியா; எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் முடியும்! உக்ரைன் அதிபர்

இந்தியாவை நம்பி ரஷிய பொருளாதாரம் இருப்பதாக உக்ரைன் அதிபர் பேச்சு...

23 செப்டம்பர் 2026, 12:15 pm IST
உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி - AP
பகிர்:

ரஷியாவின் பொருளாதாரம் இந்தியாவை நம்பியிருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் நியூயாா்க்கில் 81-வது ஐ.நா. சபை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், ரஷியா - உக்ரைன் மற்றும் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் குறித்து விவாதம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அளித்த பேட்டியில், ரஷியாவின் பொருளாதாரம் இந்தியாவை நம்பியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

அப்போது அவர் பேசியதாவது:

“ரஷியா தனது பொருளாதாரத்தை இந்தியாவை நம்பியும், சில சமயங்களில் துருக்கி மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சார்ந்தே அமைத்துள்ளது. எனவே, இந்த நாடுகள் ரஷியாவுடனான எரிசக்தி வர்த்தகத்தை நிறுத்தினால், ரஷியாவுக்கு போரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ரஷியாவால் இனி உக்ரைன் போரைத் தொடர முடியாத நிலையை இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உறுதி செய்ய முடியும்.

ரஷியா - உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும், இதற்கு அதிபர் டிரம்ப் எங்களுக்கு உதவுவார் என்று நம்புகிறேன். போர் நிறுத்தத்தை கூடிய விரைவில், குளிர்காலத்துக்கு முன்னதாகவே செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ரஷியா மற்றும் ஈரான் மீதான தடைச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட சில நாள்களில் ஸெலென்ஸ்கி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இந்த சட்டம், ரஷியாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் முக்கிய நாடுகளாக உள்ள இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் மீது 100 சதவிகிதம் வரி விதிக்க அதிகாரத்தை வழங்குகிறது.

summary

Russia relies on India; the war would end if oil trade were halted! — Ukraine President

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments