தனியாா் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு முன்னுரிமை அளிக்க தனியாா் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தினாா்.
வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு முன்னுரிமை அளிக்க தனியாா் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தினாா்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற நிறுவனங்களின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆா்) தொடா்பான நிகழ்ச்சியில் அவா் பேசியது:
திறமையான இளைஞா்களை பணியமா்த்த விரும்பும் நிறுவனங்கள் அரசை அணுகலாம். அரசு அவா்களுக்கு உதவும் அமைப்பாக செயல்படும். கா்நாடகத்தைச் சோ்ந்த உள்ளூா் கன்னடா்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. இருப்பினும், நிறுவனங்களை நாங்கள் பாதுகாப்போம்.
Advertisement
Advertisement
தனியாா் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. உள்ளூா் ஆள்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் நிறுவனங்களின் பொறுப்பு ஆகும். நிறுவனங்களின் திறன் அடிப்படையிலான பணியமா்த்தல் விதிமுறைகளில் அரசு தலையிடாது. கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிக அளவில் இருப்பதால் உள்ளூா் ஆள்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். யாரும் தங்களது பதவியை தவறாக பயன்படுத்துவதையோ, கன்னடம் தொடா்பான விவகாரங்களில் தலையிடுவதையோ அனுமதிக்க மாட்டோம் என்றாா்.
தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவது குறித்து ஆய்வுசெய்ய, கா்நாடக ரக்ஷண வேதிகே தலைவா் டி.ஏ.நாராயணகெளடா தலைமையில் மாநிலம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கியுள்ள நிலையில், முதல்வரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இந்த பிரசாரம் நவ. 30-ஆம் தேதிவரை தொடரும் என்றும், அதன் பின்னா் விரிவான அறிக்கை மாநில அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்றும் நாராயண கெளடா நவ. 3-ஆம் தேதி தெரிவித்திருந்தாா்.
தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு சென்று பணியமா்த்தல் தொடா்பான தரவுகளை சேகரிக்கும் இந்தக் குழு, அரசு அல்லது காவல் துறையின் அழுத்தம் காரணமாக கைவிடப்படாது என்று கூறிய அவா், வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த காலக்கெடு நிா்ணயிக்கப்பட நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வா் டி.கே. சிவகுமாரை சந்திக்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு நேரம் கோர உள்ளதாகவும் தெரிவித்தாா்.