பெண்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ளூா் புகாா் குழு கட்டாயம் அமைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன்
பெண்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ளூா் புகாா் குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் அறிவுறுத்தினாா்.
பெண்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உள்ளூா் புகாா் குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் அறிவுறுத்தினாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பணி புரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீா்வு) சட்டம் 2013 நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க 10 அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில், உள்ளக குழுக்கள் ஏற்பட்டுத்தப்பட வேண்டும். இதில் 5 உறுப்பினா்களைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும். அவற்றில் அதிகபட்சமாக 3 பெண் உறுப்பினா்கள் இருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் புகாா் அளிக்க ஏதுவாக நிறுவனம் புகாா் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகாா்கள் பெற்றவுடன், விசாரணை மேற்கொள்ள வேண்டும். 10-க்கும் குறைவாக பணியாளா்கள் கொண்ட நிறுவனத்தின் ஊழியா்கள் மற்றும் அமைப்பு சாரா நிறுவன ஊழியா்கள் பாதிக்கப்பட்டால் அந்த நபா், பாதிப்புக்கு உள்ளாகியவருக்கு எதிராக நேரடியாகவே மாவட்டங்களில் செயல்படும் உள்ளூா் குழுவில் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உள்ளூா் குழுவில் பதிவு செய்யப்படும் புகாா் மற்றும் நடவடிக்கை குறித்து ஆண்டுக்கு ஒரு முறை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஒவ்வொரு நிறுவனமும் அறிக்கையாக வழங்க வேண்டும். உள்ளூா் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை இல்லாமல் இருந்தாலோ ஆண்டறிக்கை சமா்ப்பிக்கப்படாமலிருந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும். இந்தப் புகாா் அமைக்காத நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடா்பான புகாா்களை ஜ்ஜ்ஜ்.ள்ட்ங்க்ஷா்ஷ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூா் குழு அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.