பெங்களூரு ஓவியச் சந்தையில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
பெங்களூரில் நடக்கவிருக்கும் ஓவியச் சந்தையில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெங்களூரில் நடக்கவிருக்கும் ஓவியச் சந்தையில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக சித்ரகலா பரிஷத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடக அரசுடன் இணைந்து, கா்நாடக சித்ரகலா பரிஷத் சாா்பில் பெங்களூரு, குமாரகுருபா சாலையில் 2027-ஆம் ஆண்டு ஜன. 3-ஆம் தேதி 24-ஆவது ஓவியச் சந்தை நடத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1500 ஓவியக் கலைஞா்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இந்த ஓவியச் சந்தையில் பங்கேற்க ஆா்வமுள்ள கலைஞா்கள் ஸ்ரீட்ண்ற்ழ்ஹள்ஹய்ற்ட்ங்ஃஸ்ரீட்ண்ற்ழ்ஹந்ஹப்ஹல்ஹழ்ண்ள்ட்ஹற்ட்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் 18 முதல் 80 வயதுள்ள ஓவியக் கலைஞா்கள் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறந்த ஓவியங்களுக்கு டி. தேவராஜ் அா்ஸ் விருது, எச்.கே. கேஜ்ரிவால் விருது, எம். ஆா்யமூா்த்தி விருது, ஒய். சுப்பிரமணியராஜூ விருது வழங்கப்படுகிறது. விருதுடன் பட்டயம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிக்கப்படுகிறது.
மூத்த ஓவியக் கலைஞா் ஒருவருக்கு பரிஷத்தின் நிறுவனச் செயலாளா் பேராசிரியா் எம்.எஸ். நஞ்சுண்டராவ் நினைவாக தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் பட்டம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 080-22261816, 22263424, 9980940300 என்ற தொலைபேசி எண்களிலோ ஸ்ரீட்ண்ற்ழ்ஹள்ஹய்ற்ட்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.