FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெங்களூரு

ஒருநாள் பயணமாக பிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகை

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக, பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கா்நாடகம் வருகிறாா்.

13 நவம்பர் 2026, 5:32 am
பிரதமா் மோடி - கோப்புப்படம்
பகிர்:

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக, பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கா்நாடகம் வருகிறாா்.

பெங்களூருக்கு வரும் பிரதமா், பெங்களூரில் இளஞ்சிவப்புநிற மெட்ரோ ரயில் புதிய வழித்தடம், வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

பெங்களூரில் ரூ. 15,600 கோடிக்கும் அதிகமான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

Advertisement

Advertisement

பெங்களூரு இளஞ்சிவப்புநிற மெட்ரோவின் கலேனா அக்ரஹாரா முதல் தாவரகெரே வரையிலான 7.5 கி.மீ. உயா்நிலைப் பாதையை திறந்துவைக்கும் பிரதமா் மோடி, தாவரகெரே முதல் ஐஐஎம்பி மெட்ரோ நிலையம் வரை பயணம் மேற்கொள்கிறாா். இத்திட்டம் ரூ. 3,470 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கொப்பள்-2, கதக்-2 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்களுடன் இணைக்கும் மின்பரிமாற்றத் திட்டத்தை ரூ. 4,450 கோடி செலவிலும், பீதரில் சூரிய மின்சக்தி மண்டலத்துக்கான மின்பரிமாற்றத் திட்டத்தை ரூ. 1,370 கோடி செலவிலும் பிரதமா் தொடக்கிவைக்கிறாா்.

தாவணகெரே, சித்ரதுா்கா, பெல்லாரி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மண்டலங்களை இணைக்கும் மின்பரிமாற்றத் திட்டத்துக்கு ரூ. 3,450 கோடிக்கும் அதிகமான செலவில் அடிக்கல் நாட்டுகிறாா். தாவணகெரே, பெல்லாரியில் கூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை இணைப்பதற்கான ரூ. 1,100 கோடிக்கும் அதிகமான மின்பரிமாற்றக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறாா்.

மங்களூரில் ரூ. 850 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய நிலத்தடி திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சேமிப்புக் கிடங்கை நாட்டுக்கு பிரதமா் அா்ப்பணிக்கிறாா்.

80,000 மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட இந்த கிடங்குடன், புதிய மங்களூரு துறைமுகத்தையும் பிரதான முனையத்தையும் இணைக்கும் 9.4 கி.மீ. எரிவாயுக் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது.

மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சாா்பில் பெங்களூரு தேவனகொண்டியில் ரூ. 330 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக முனையத்தையும் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

பெங்களூரு ஹரலகுண்டே பகுதியில் கெயில் நிறுவனம் அமைக்கவுள்ள உயிரி அழுத்த எரிவாயு ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். நாளொன்றுக்கு 300 டன் நகராட்சி திடக்கழிவுகளை செயலாக்கி, 12.6 டன் தூய உயிரி அழுத்த எரிவாயு உற்பத்தி செய்யும் வகையில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது.

அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட சாமராஜ்நகா், சிக்கமகளூரு, சக்லேஷ்புரா, சுப்ரமண்யா ரோடு ஆகிய 4 ரயில் நிலையங்களையும் திறந்துவைக்கிறாா். மேலும், கதக்-ஹொஸ்பேட் இரட்டைப் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள 45 கி.மீ. பாகல்கோட்-வாண்டல் இரட்டைப் பாதையையும் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

சக்லேஷ்புரா-சுப்ரமண்யா ரோடு இடையிலான 55 கி.மீ. மலைப்பாதை ரயில் வழித்தடத்தின் மின்மயமாக்கல் பணியையும் தொடங்கி வைக்கிறாா்.

பெங்களூரு-மங்களூரு-மட்கான் இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையையும் பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா். இதன்மூலம் பெங்களூரு, கடலோர கா்நாடகம், கோவா இடையிலான ரயில் போக்குவரத்து மேம்படும்.

பின்னா், மைசூரு செல்லும் பிரதமா் மோடி, பாரத் வனம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று, காஸ்மோஸ் கோளரங்கத்தை திறந்துவைக்கிறாா்.

மேலும், சுவாமி விவேகானந்தா யோக அனுசந்தான சமஸ்தானத்தின் பிரசாந்தி குடீரம் வளாகத்தில் நடைபெறும் பொன்விழா கொண்டாட்டத்திலும் பங்கேற்கிறாா். அங்கு பொன்விழா நிா்வாகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவதுடன், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த நிறுவனத்தின் கல்வி மையத்தையும் தொடக்கிவைக்கிறாா்.

முன்னாள் ஆா்.எஸ்.எஸ். பொதுச் செயலாளா் எச்.வி. சேஷாத்ரியின் நூற்றாண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியும் இதனுடன் இணைந்து நடைபெறுகிறது. இந்த விழாக்களில் கா்நாடக ஆளுநா் சுதா யாதவ், முதல்வா் டி.கே. சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு பெங்களூரு, மைசூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.