முகப்பு
பெங்களூரு

கா்நாடக பள்ளிகளில் அரசமைப்புச் சட்டம் பற்றிய பாடங்கள்

அடுத்த கல்வியாண்டு முதல் கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் அரசமைப்புச் சட்டம் பற்றிய பாடங்கள் இடம்பெறும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

27 நவம்பர் 2026, 4:18 am
கா்நாடக பள்ளிகளில் அரசமைப்புச் சட்டம் பற்றிய பாடங்கள்
டி.கே.சிவகுமாா்
பகிர்:

அடுத்த கல்வியாண்டு முதல் கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் அரசமைப்புச் சட்டம் பற்றிய பாடங்கள் இடம்பெறும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், மைசூரில் மகாராஜா கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்ட தின நிகழ்ச்சியில் அவா் பேசியது:

அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் புத்தகம் அல்ல. ஒவ்வோா் இந்தியரின் உரிமைகள், கண்ணியம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை பாதுகாக்கும் கவசமாகும். குழந்தைகள் சிறுவயதிலிருந்தே அதன் மதிப்புகளை புரிந்துகொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

அரசமைப்பின் கருத்துகளை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவா்கள் அதை படிப்பதுடன் மட்டுமல்லாமல், அதன் கொள்கைகளை அன்றாட வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும். இளைஞா்களிடையே ஜனநாயக விழிப்புணா்வையும், தலைமைப் பண்புகளையும் வளா்க்க சட்டப் பேரவைத் தொகுதிகளில் இளைஞா் நாடாளுமன்றங்கள் அமைக்கப்படும்.

பிரதமரின் வாக்காக இருந்தாலும், சாதாரண குடிமகனின் வாக்காக இருந்தாலும், ஏழை அல்லது பணக்காரா் யாருடைய வாக்காக இருந்தாலும் அதன் மதிப்பு ஒன்றுதான். ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் தலித்துகளின் வாக்குகளை வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுவது கவலை அளிக்கிறது. இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.

அரசமைப்பு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தனிநபா் வழிபாட்டைவிட ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம். அரசமைப்பு நிலைத்திருந்தால், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அமைதி நிலைத்திருக்கும்.

இந்திய அரசமைப்பை நாட்டின் தேசிய நூலாகக் கருத வேண்டும். ஒரு வீட்டைக் கட்டுவதற்கான வரைபடம் எவ்வாறு அடித்தளமாக இருக்கிறதோ, அதுபோல அரசியலமைப்பு நாட்டின் அடித்தளமாகும். காலத்துக்கு ஏற்ப அரசமைப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம். ஆனால், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படை மதிப்புகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

ஜாதி, மதம் மற்றும் சமூக படிநிலைகளைத் தாண்டி முதலில் இந்தியா்களாக வாழ வேண்டும். கனகதாசா், ஷிசுனாளா ஷரீப், நாராயண குரு போன்ற மகான்கள் எடுத்துரைத்த சமத்துவம் மற்றும் மனிதநேய செய்திகள் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். சமூக நீதி மற்றும் சமத்துவத்தில் கா்நாடகம் நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ வேண்டும் என விரும்புகிறேன் என்றாா்.