இன்று கெம்பே கெளடர் பிறந்த நாள் விழா
பெங்களுரு மாநகராட்சி சார்பில் கெம்பே கெளடர் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை (ஆக.16)கொண்டாடப்படுகிறது.
பெங்களுரு மாநகராட்சி சார்பில் கெம்பே கெளடர் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை (ஆக.16)கொண்டாடப்படுகிறது.
மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கெம்பே கெளடர், அவரது மருமகள் லட்சுமிதேவி ஆகியோரின் சிலைகளுக்கு காலை 8 மணிக்கு மேயர் சம்பத்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 9 மணியளவில் லால் பாக்கில் உள்ள எல்லை கோபுரத்துக்கு துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், மேயர் சம்பத்ராஜ் ஆகியோர் பூஜை செய்து, ஜோதி யாத்திரையைத் தொடக்கி
வைக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து கோரமங்களா, கெம்பாபுதி ஏரி, மேக்ரி சதுக்கத்தில் உள்ள எல்லை கோபுரங்களுக்கு பூஜை செய்து ஜோதி யாத்திரை தொடக்கிவைக்கப்படுகிறது. கெம்பே கெளடர் நினைவிடம் உள்ள மாகடியிலிருந்தும் ஜோதி யாத்திரை தொடங்கி, பெங்களூரு மாநகராட்சிக்குள் வருகிறது. 4 எல்லை கோபுரங்கள், மாகடியிலிருந்து வரும் ஜோதி யாத்திரைகள் அனைத்தும் மாநகராட்சி வளாகத்தில் நிறைவடைகிறது.
ஜோதியுடன் யாத்திரை மேற்கொள்பவர்களை மேயர் சம்பத்ராஜ் வரவேற்று, ஜோதியை பெற்றுக் கொள்கிறார். ஜோதி யாத்திரையில் பல்வேறு கலை, கலாசார குழுக்கள் பங்கேற்கின்றன. பிற்பகல் 2 மணியளவில் மாநகராட்சியில் சிறந்த சேவை புரிந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், மேயர் சம்பத்ராஜ் விருது வழங்கி கெளரவிக்கின்றனர்.
மாலை 6 மணியளவில் கலை, இலக்கியம், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதல்வர் குமாரசாமி விருது வழங்கி கெளரவிக்கிறார். விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு இரவு 8 மணியளவில் ஸ்ரீகிருஷ்ணா சந்தானா புராண நாடகம் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.