இயற்கை பேரிடர்களைத் தடுக்க அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியம்: அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா
இயற்கை பேரிடர்களைத் தடுக்க அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா தெரிவித்தார்.
இயற்கை பேரிடர்களைத் தடுக்க அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம்.கே.சூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:-
கடந்த 40 ஆண்டுகளாக தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக திகழும் ராமையா தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
இளங்கலை, முதுகலை பட்டம் பெறும் மாணவர்கள் இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை செய்ய வேண்டும்.
130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் கல்வி, சுகாதாரம், தூய குடிநீர் உள்ளிட்டவை கிடைப்பது சவாலாக உள்ளது. அவ்வப்போது ஏற்படும் இயற்கை பேரிடர்களால் மக்கள் உயிர்களையும், சொத்துகளையும் இழப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
அண்மையில் சென்னை, கேரளம், குடகு உள்ளிட்ட இடங்களில் இயற்கை பேரிடரால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இயற்கை பேரிடர்களைத் தடுக்க அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியம். இவற்றை பட்டம் பெற்ற மாணவர்கள் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ளது.
இருந்தாலும், குழந்தைகள் இறப்பு, தூய குடிநீர், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் இந்தியா இன்னும் பின்தங்கியுள்ளது. எனவே குழந்தைகள் இறப்பு, பெண்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும். நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்ற மாணவர்கள் நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.