ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு! குதிரை பேரம் குறித்து மீண்டும் புகார்?
குதிரை பேரம் மூலம் தனது கட்சி எம்.எல்.ஏ., தவெகவுக்குச் சென்றது குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்தித்துள்ளதாகத் தகவல்...
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (ஆக/ 25) சந்தித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற தினகரன், தனது கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. கட்சி மாறிச் சென்றது குறித்து அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.
குதிரை பேரம் மூலம் தனது கட்சி எம்.எல்.ஏ. தவெகவுக்குச் சென்றது குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் அமமும எம்.எல்.ஏ. காமராஜை தவெகவினர் கடத்திச் சென்றதாகவும் டிடிவி தினகரன் புகார் தெரிவித்திருந்தார்.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ். இவர் பேரவையில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.
இதனால் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
TTV Dhinakaran meets the Governor! Another complaint regarding horse-trading
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.