பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு கமலா நகரைச் சேர்ந்தவர் வினுதா (26). இவர் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
சங்கர்நாக் பேருந்து நிறுத்தம் அருகே அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 பேர் வழிமறித்து, கழுத்திலிருந்த ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனராம்.
புகாரின்பேரில் பசவேஸ்வரநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.