நஞ்சு கலந்த உணவு, பிரசாத விவகாரம்: மேலும் ஒருவர் சாவு
நஞ்சு கலந்த உணவு, பிரசாதம் சாப்பிட்ட விவகாரத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
நஞ்சு கலந்த உணவு, பிரசாதம் சாப்பிட்ட விவகாரத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் வட்டம் சுலவாடி கிச்சிகுத்தி மாரியம்மன் கோயிலின் கோபுர அடிக்கல் நாட்டுவிழா டிச. 14-ஆம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் மதிய உணவைச் சாப்பிட்ட 100-க்கும் அதிகமானோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் சம்பவதன்று 11 பேரும், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 2 பேரும் உயிரிழந்தனர். திங்கள்கிழமை மைசூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மெய்லி பாய் என்பவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மைசூரு காவிரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மாதேஸ்வரா மலையைச் சேர்ந்த துண்டம்மா (50) என்பவர் உயிரிழந்தார். கோயிலில் உணவு, பிரசாதத்தை சமைத்த புட்டசாமி என்பவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை தேறி வருகிறது. நஞ்சு கலந்த உணவு, பிரசாதத்தை சாப்பிட்ட அவரது மகள் ஏற்கெனவே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.