பேருந்து மோதியதில் மாணவர் உள்பட 2 பேர் சாவு
மாநகரப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
மாநகரப் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு கஸ்தூரிபா நகரைச் சேர்ந்தவர்கள் யாதுகுமார் (18), சந்திரகாந்த் (17). இவர்கள் 3 பேரும் மைசூருசாலை கே.பி.நகரில் உள்ள மாநகராட்சி பியூ கல்லூரியில் யாதுகுமார் 2-ஆம் ஆண்டும், சந்திரகாந்த் முதலாம் ஆண்டும் கல்வி பயின்று வந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பாபூஜிநகர் கிறிஸ்துவ மயானத்தின் அருகே யாதுகுமார், சந்திரகாந்த் ஆகியோர் நண்பர்களுடன் சாலையோர நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனராம். அப்போது தொட்டபஸ்தியிலிருந்து மார்கெட்டிற்கு சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் சென்று கொண்டிருந்த யாதுகுமார், சந்திரகாந்த் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மாணவர் ராஜசேகர் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பேட்டராயனபுரா போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மாநகரப் பேருந்து மோதியதில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று மேயர் கங்காம்பிகே அறிவித்துள்ளார்.
வாகனங்கள் ஏலம்
பெங்களூரு, டிச. 18: டிச. 20-ஆம் தேதி தண்டு ரயில்வே காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரு தண்டு ரயில்வே காவல் நிலையத்தில் டிச. 20-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட் 20 இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942351 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.