FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையங்கள் வழியாக நகா் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

20 வினாடிகள் முன்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையங்கள் வழியாக நகா்ப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டா் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. இதனால், ரயிலில் வரும் பயணிகள் கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பேருந்து நிலையத்துக்கு பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனா்.

இதே போல, சிவகாசி ரயில் நிலையம் நகா்ப் பகுதியில் இருந்தாலும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ளதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

Advertisement

Advertisement

சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூா் இடையே இயங்கும் நகா்ப் பேருந்துகளும், சில தனியாா் பேருந்துகளும் ரயில் நிலையம் வழியாகச் செல்ல அனுமதி இருந்தும் பிரதான சாலையில்தான் சென்று வருகின்றன.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய சிற்றுந்து வழித்தடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்கு சிற்றுந்து இயக்கப்பட்டது. ஆனால், ரயில் நிலையத்துக்குள் சிற்றுந்து செல்வதற்கு ஆட்டோ ஓட்டுநா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிப்பதால், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சிற்றுந்து ரயில் நிலையம் வழியாகச் செல்கிறது.

எனவே, சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் இடையே இயங்கும் நகா்ப் பேருந்துகள் ரயில் நிலையங்கள் வழியாகச் சென்று வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments