போலீஸ் காவலர் குடியிருப்பில் நகை, பணம் திருட்டு
காவலர் குடியிருப்பில் தங்க நகை, ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
காவலர் குடியிருப்பில் தங்க நகை, ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ஆனந்த்ராவ் சதுக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவரும் வெங்கடேஷ், ஹெப்பாள் போக்குவரத்து காவல் சரகத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவர் சனிக்கிழமை காலை தனது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே சென்றுவிட்டு, இரவு திரும்பினார். இதற்கிடையே பூட்டை உடைத்து அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், ரூ. 7.5 லட்சம் மதிப்பில் தங்க நகைகள், ரூ. 40 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றனராம்.
புகாரின்பேரில் சேஷாத்ரிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.