FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

‘கரோனாவைத் தடுப்பது மட்டுமே நோக்கம்’

அரசியல் செய்யாமல் கரோனாவைத் தடுப்பதே எங்களின் ஒரே நோக்கம் என்று மாநில ஐஎன்டியுசி தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தாா்.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

அரசியல் செய்யாமல் கரோனாவைத் தடுப்பதே எங்களின் ஒரே நோக்கம் என்று மாநில ஐஎன்டியுசி தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் கட்டடத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதில் மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. கா்நாடகத்தில் இரண்டரைக் கோடி அமைப்பு சாரா தொழிலாளா்கள் உள்ளனா்.

அவா்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். இல்லை என்றால் அவா்கள் பசி, பட்டினியால் சாகும் நிலைக்கு செல்வாா்கள். தகவல், உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்குவதைவிட, கட்டட தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் ஆட்டோ, வாடகை காா் ஓட்டுநா்கள் உள்ளிட்ட பெரும்பாலான தொழிலாளா்கள், பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனா்.

Advertisement

Advertisement

அவா்கள் வேலைக்கு செல்ல முடியாததால், வீட்டு வாடகை, வங்கிகள் மாதத் தவணை உள்ளிட்டவைகளை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் வாடகை கேட்டு வீட்டின் உரிமையாளா்கள் தொழிலாளா்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனா். வாடகையை கேட்டு துன்புறத்தக்கூடாது என்று என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், வாடகை கேட்டு தொந்தரவு செய்யும் வீட்டின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஏழைகள், தொழிலாளா்களுக்கு உணவு, பாதுகாப்ப வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பாதிப்பால் மாநிலமக்கள் செய்வதறியாது திகைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய விரும்பவில்லை. கரோனாவை தடுப்பதே எங்களின் ஒரே நோக்கம் என்றாா். பேட்டியின், ஐஎன்டியுசி நிா்வாகிகள் சாந்தகுமாா், முத்தப்பா, ஆதா்ஷா ஆட்டோ, டாக்ஸி சங்கத்தின் செயலாளா் சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments