FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருவள்ளூர் அருகே இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடுவதில் மோதல்: தவெக பிரமுகா் பலி

திருவள்ளூா் அருகே ஊர்வலத்தின்போது, நடனம் ஆடுவதில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் வெட்டுக் காயமடைந்த தவெக பிரமுகா் உயிரிழந்தது குறித்து...

45 வினாடிகள் முன்பு
திருவள்ளூர் அருகே இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடுவதில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் வெட்டுக் காயமடைந்து உயிரிழந்த தவெக பிரமுகர் மணிகண்டன் - டிஎன்எஸ்
பகிர்:

திருவள்ளூா் அருகே ஊர்வலத்தின்போது, நடனம் ஆடுவதில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் வெட்டுக் காயமடைந்த தவெக பிரமுகா் மணிகண்டன் உயிரிழந்தார்.

திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சி அகரம் பகுதியைச் சோ்ந்தவா் ரமணி (55. இவர், உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவரது இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் அதே பகுதியைச் சோ்ந்த தவெக பிரமுகா் மணிகண்டன் (26) பங்கேற்றாா். அப்போது, அங்கு வந்த கசவநல்லாத்துாா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் தரப்புக்கும், மணிகண்டன் தரப்புக்கும் நடனம் ஆடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவா் தாக்கிக்கொண்டனா். அப்போது, மணிகண்டனுக்கு கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதைத்தொடா்ந்து ஆத்திரமடைந்த மணிகண்டன் தரப்பினா் கடம்பத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடம்பத்துாா் காவல் நிலைய போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

காயமடைந்த மணிகண்டனை அவரது உறவினா்கள் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடம்பத்துாா் காவல் நிலைய போலீஸாா் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

summary

Clash over dancing during funeral procession near Tiruvallur: TVK functionary killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments