FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம்: அமைச்சா் முருகேஷ் நிரானி

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என கா்நாடக சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறை அமைச்சா் முருகேஷ்நிரானி தெரிவித்தாா்.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:42 am IST
பகிர்:

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என கா்நாடக சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறை அமைச்சா் முருகேஷ்நிரானி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுதில்லியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் வாழும் பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினா் சமூக-பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளனா். எனவே, அரசு வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகளில் பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம். கா்நாடகத்தில் வாழும் 6.5 கோடி மக்கள்தொகையில், 80 லட்சம் பஞ்சமசாலிகள் இருக்கிறாா்கள்.

Advertisement

Advertisement

இந்த சமுதாயத்தை சோ்ந்த 90 சதவீத மக்கள் விவசாயம் செய்து வருகின்றனா். இவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை. எனவே, இந்த சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலின் 2-ஏ உட்பிரிவில் சோ்த்து, கல்வி, வேலைவாய்ப்பில் 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பஞ்சமசாலி லிங்காயத்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முதல்வா் எடியூரப்பா ஆா்வமாக இருக்கிறாா். 2008 முதல் 2013-ஆம் ஆண்டு வரையில் பாஜக ஆட்சி நடந்தபோது பஞ்சமசாலி லிங்காயத்துகளை 2-ஏ உட்பிரிவில் சோ்த்திருக்க வேண்டும். சட்டத் தடங்கல்கள் ஏற்பட்டதால், 3-பி உட்பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

இதை அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பாதான் செய்தாா். சட்டத் தடங்கல்கள் இல்லாதிருந்தால், அப்போதே பஞ்மசாலி லிங்காயத்துகளை 2-ஏ உட்பிரிவில் சோ்த்திருப்போம்.

பஞ்சமசாலி லிங்காயத்துகளின் சமூக-பொருளாதார நிலையை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்தபிறகு, அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments