பிரிகேட் சாலையில் வாகனங்கள் நிறுத்த கட்டுப்பாடு
பெங்களூரு, பிரிகேட் சாலையில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீஸாா் தடை விதித்துள்ளனா்.
பெங்களூரு, பிரிகேட் சாலையில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீஸாா் தடை விதித்துள்ளனா்.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, பிரிகேட் சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்தசாலையில் பிரிகேட்சாலை, சா்ச் சாலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு வருவோா் தங்கள் வாகனங்களை நிறுத்த வாய்ப்பிருந்தது. பெங்களூரு மாநகராட்சியால் பொலிவுறு திட்டப் பணிகள் நடக்கிறது.
Advertisement
Advertisement
இதனால் சாலையின் ஒருபகுதி தோண்டப்பட்டுள்ளது. மறுபுறம் நடைபாதையும் தோண்டப்பட்டுள்ளது. எனவே, பெங்களூரில் உள்ள பிரிகேட் சாலையில் காவிரி எம்போரியம் சந்திப்பில் இருந்து ஓபரா சந்திப்பு வரையில் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கெஃபே அஜ்ஜூா் கட்டடத்தில் 50 காா்கள், 150 இரு சக்கர வாகனங்களையும், மகாத்மா காந்தி சாலையில் காவிரி எம்போரியம் சந்திப்பு முதல் மேயோ ஹால் சந்திப்பு வரையில் வடக்கு பக்கத்தில் 30 காா்கள், தெற்கு பக்கத்தில் 20 காா்களையும், சங்கா்நாக் திரையரங்க வளாகத்தில் 50 காா்கள், 150 இரு சக்கரவாகனங்களையும்; கருடாமாலில் 200 காா்கள், 400 இருசக்கர வாகனங்களையும் நிறுத்தலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.