FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஒரே மேடையில் மாமல்லபுரம் வேட்பாளர்கள்

செங்கல்பட்டு, அக். 8: மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் 8 கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே மேடையில் பேசினர். மாமல்லபுரம் அரிமா சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழம

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

செங்கல்பட்டு, அக். 8: மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் 8 கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே மேடையில் பேசினர். மாமல்லபுரம் அரிமா சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாமல்லபுரம் அலெக்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.

 மாவட்ட அரிமா சங்கத் தலைவர் டி. புனிதவேல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜே. சேதுராமன், டி. கிருஷ்ணகுமார், எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பி. ஓம்பிரகாஷ் வரவேற்றுப் பேசினார்.

 மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் எம்.கோதண்டபாணி (அதிமுக), வெ.விஸ்வநாதன் (திமுக),சி.இ.சத்யா (மதிமுக),எம்.ரஞ்சித் (தேமுதிக), ஓ.எம்.பி.சரவணன் (காங்கிரஸ்),வ.பாலன் (பாமக), சிறுத்தை வீ.கிட்டு (விடுதலை சிறுத்தைகள்) எம்.ஸ்ரீதர் (பாஜக) ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

 மாமல்லபுரம் நகர வளர்ச்சிக்கும், சுற்றுலா மேம்பாட்டிறகும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அவர்கள் பேசினர். நிகழ்ச்சியில் அரிமா சங்க வட்டாரத் தலைவர் கே.பாண்டியன், மண்டல தலைவர் கே.எஸ். கோதண்டராமன், எஸ். செல்லக்கண்ணு, ஏ.எச். அப்துல் ஹமீது, கே. கருப்பசாமி, எஸ். சரவணன், ஜான் பாஸ்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஏற்பாடுகளை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments