பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சி, அக். 8: கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணின் தாலிச் சங்கிலியை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, அக். 8: கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணின் தாலிச் சங்கிலியை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகை பிள்ளையார் கோயில் தெரு பின்புறம் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயப்பிரதா (19).
இவர்கள் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது ஜெயப்பிரதாவின் கழுத்தில் இருந்த தாலிச்செயினை மர்ம நபர்கள் பறித்தனர். எழுந்து பார்த்த ஜெயப்பிரதா கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.