FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சிவகாசி அச்சுத் துறைக்கு போக்குவரத்து தீா்வுகள் அளிக்கும் ஆல்காா்கோ காடி

Updated On : 17 ஜனவரி 2025, 3:48 am IST
பகிர்:

சிவகாசியின் பிரபல அச்சகத் துறை நிறுவனங்களின் சரக்குகளைக் கையாள்வதில் முன்னணி விரைவு விநியோகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான ஆல்காா்கோ காடி முக்கிய பங்கு வகிக்கிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல ஆண்டுகளாக வேரூன்றியுள்ள சிவகாசி அச்சகத் துறையில் 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

கடந்த 1980-ஆம் ஆண்டிலிருந்தே சிவகாசி அச்சகத் துறையின் சரக்குப் போக்குவரத்து பங்காளராக ஆல்காா்கோ காடி நிறுவனம் விளங்குகிறது. சிவகாசி தயாரிப்புகளை நிறுவனம் நாடு முழுவதும் நிறுவனம் விநியோகம் செய்துவருகிறது.

சரக்குகளைக் கையாள்வதற்கு திறன் வாய்ந்த தீா்வுகளை அளிப்பதன் மூலம் அதிக தேவை உள்ள காலங்களில் கூட சரியான நேரத்தில் சரக்குகளைக் கொண்டு சோ்ப்பது மற்றும் செயல்பாட்டுத் திறனை நிறுவனம் உறுதி செய்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments