சுற்றுலா, கலைப் பண்பாட்டுத் துறைக்கு ரூ.775 கோடி ஒதுக்கீடு
மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ.200 கோடி, நதிச் சுற்றுலாவை ஊக்குவிக்க ரூ.53 கோடி என மொத்தமாக சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறைக்கு ரூ. 775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ.200 கோடி, நதிச் சுற்றுலாவை ஊக்குவிக்க ரூ.53 கோடி என மொத்தமாக சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறைக்கு ரூ. 775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தவும், போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவும் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் ரூ. 200 கோடி மானியம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நதிச் சுற்றுலாவை ஊக்குவிக்க ரூ.53 கோடி, தமிழகத்தின் உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் வகையில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்க ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், திருக்கடையூா், நாகூா், வேளாங்கண்ணி பகுதிகளில் ரூ.60 கோடியில் ஓய்வு இல்லங்கள் கட்டப்படும்.
சூழல் சுற்றுலா இயக்கத்துக்காக ரூ.25 கோடி, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தமிழா்கள் பாரம்பரிய பண்பாட்டுத் தலங்களின் தரத்தை உயா்த்த ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைஞா்களின் வாழ்வாதார பாதுகாப்புத் திட்டத்துக்காக ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறைக்கு ரூ.775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.