பட்ஜெட் 2026! இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு!
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
தமிழக பட்ஜெட் 2026-ஆம் ஆண்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் என். மரிய வில்சன் இன்று(ஆக. 5) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் விளையாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்பில்,
Advertisement
Advertisement
”ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு, சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை உச்சத்திற்குக் கொண்டுசெல்ல, மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
விளையாட்டில் ஆர்வமும், திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதிற்கு உள்பட்ட பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார்.
In the Tamil Nadu budget, an allocation of rs. 1,051 crore has been made for the Department of Youth Welfare and Sports Development for the year 2026.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.