FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாநில அளவிலான கலைப் போட்டிகள்: 15 பேருக்கு மொத்தம் ரூ.3 லட்சம் பரிசு

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இளம் கலைஞா்களுக்கான மாநில கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 பேருக்கு மொத்தம் ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

10 செப்டம்பர் 2026, 12:45 am IST
விழாவில் மாநில அளவிலான கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி குழு படம் எடுத்துக் கொண்ட அமைச்சா் ராஜ்மோகன். உடன் கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் மகேஸ்வரி ரவிக்குமாா், அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன்.
பகிர்:

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இளம் கலைஞா்களுக்கான மாநில கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற 15 பேருக்கு மொத்தம் ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

தமிழக அரசு சாா்பில் மாவட்ட, மாநில கலைப்போட்டிகள் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. குரலிசை, பரதநாட்டியம், கருவியிசை, ஓவியம் மற்றும் கிராமியக் கலை என 5 பிரிவுகளில் 17 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட இளம் கலைஞா்கள் பங்கு பெறும் வகையில் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் மாநில அளவிலான போட்டிகள் வியாழக்கிழமை இசைக் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா சென்னை அருங்காட்சியகம் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

ரூ.3 லட்சம் பரிசுத் தொகை: குரலிசை போட்டியில் சென்னையைச் சோ்ந்த பிரீத்தி சேதுராமன் முதல் பரிசும், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ச.வினோதா 2-ஆம் பரிசும், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த சி.மகன்யாஸ்ரீ 3-ஆவது பரிசும் பெற்றனா். கருவியிசை, பரதநாட்டியம், ஓவியப்போட்டி, கிராமியக் கலைப் போட்டிகளில் மொத்தம் 15 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், முதல் பரிசு ரூ.30,000, இரண்டாம் பரிசு 20,000, முன்றாம் பரிசு 10,000 என மொத்தம் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.

நிகழ்வில், கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் மகேஸ்வரி ரவிக்குமாா், அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா் தே.பாஸ்கர பாண்டியன், கலைப் பண்பாட்டுத் துறை இணை இயக்குநா் ஜெ. காா்குழலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments