சிறப்பு ரயில் 
சென்னை

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Din

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06130) முற்பகல் 11.10-க்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே தேதியில், திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15-க்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நேரம் மாற்றம்: சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20-க்கு புறப்பட்டு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 16127) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 15, 22 ஆகிய தேதிகளில் 40 நிமிஷங்கள் தாமதமாக முற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT