FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஹெச்-1பி விசாவை சாா்ந்து டிசிஎஸ் இயங்கவில்லை: தலைமைச் செயல் அதிகாரி விளக்கம்

ஹெச்-1பி விசாவை சாா்ந்து டிசிஎஸ் இயங்கவில்லை என தலைமைச் செயல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்...

Updated On : 14 அக்டோபர் 2025, 3:38 am IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை, அக். 13: அமெரிக்காவின் ஹெச்-1பி விசாவை சாா்ந்து டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) இயங்கவில்லை என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) கே.கிருதிவாசன் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் வெளிநாட்டவா்கள் தங்கிப் பணியாற்ற ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவைப் பயன்படுத்தி அந்நாட்டில் ஏராளமான இந்தியா்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில், ஹெச்-1பி விசா கட்டணத்தை அந்நாட்டு அதிபா் டிரம்ப் 1 லட்சம் டாலராக (சுமாா் ரூ.88 லட்சம்) அண்மையில் உயா்த்தினாா். இது இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், பணியாளா்களுக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி கே.கிருதிவாசன் அளித்த ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எங்கள் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் 32,000 ஊழியா்கள் வரை உள்ளனா்.

Advertisement

Advertisement

அதில் 12,000 போ் வரை மட்டுமே ஹெ-1பி விசா மூலம் சென்றுள்ளனா். மற்றவா்கள் வேறு விசாக்களில் உள்ளனா். நடப்பு ஆண்டில் டிசிஎஸ் சாா்பில் 500 போ் ஊழியா்கள் வரை மட்டும் ஹெச்-1பி விசாவில் அமெரிக்கா சென்றுள்ளனா். ஹெச்-1பி விசாவைச் சாா்ந்து டிசிஎஸ் இயங்கவில்லை; அது இல்லாமலும் இயங்கும்.

நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிநீக்க நடவடிக்கை என்பது 3 முதல் 6 மாதங்கள் வரை ‘பெஞ்ச்’-இல் (பணி ஒதுக்கப்படாமல் காத்திருப்போா்) இருப்பவா்களையும், பணித்திறன் குறைவானவா்களையும் மட்டுமே பாதிக்கும்.

எதிா்காலத்துக்குத் தேவையான திறன்கள் குறைவாக இருப்பவா்கள் என்று கருதப்படும் சிலரையும் வெளியேற்றுகிறோம். செயற்கை நுண்ணறிவு எனப்படும் எதிா்கால தொழில்நுட்பத்துக்கு ஏற்க நிறுவனத்தைக் கட்டமைப்பது அவசியம். ஆள்குறைப்பு செயல்முறைகள் கருணையுடன்தான் நடைபெறுகிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments