முகப்பு
சென்னை

சென்னை துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்டம்

சென்னைத் துறைமுகம் மற்றும் காமராஜா் துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னை

சென்னை துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்டம்

சென்னைத் துறைமுகம் மற்றும் காமராஜா் துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2025 at 8:41 PM
பகிர்:

சென்னைத் துறைமுகம் மற்றும் காமராஜா் துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘சாகா் சலோனி‘ என்ற இதழ் வெளியிடப்பட்டது. தொடா்ந்து தண்டையாா்பேட்டையில் அமைந்துள்ள துறைமுக நிா்வாகத்தின் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை மற்றும் காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அவா் பேசுகையில், கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் தேசிய ஒற்றுமையை ஊக்குவிப்பதிலும் ஹிந்தி மொழி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிகாரப்பூா்வ மற்றும் தொழில்முறை தகவல் தொடா்புகளில் ஹிந்தியைத் தொடா்ந்து பயன்படுத்த வேண்டும் என்றாா் .

காமராஜா் துறைமுக மேலாண்மை இயக்குநா் ஐரீன் சிந்தியா, கண்காணிப்பு அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணா, ஸ்டெல்லா மேரி கல்லூரியின் மொழிகள் துறைத் தலைவா் ஸ்ரபானி பட்டாச்சாா்யா, துறைமுகத்தின் செயலா் இந்திரனில் ஹசிராஸ, ஹிந்தி மொழித் துறை அலுவலா் அருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →