‘அனைத்து இடங்களிலும் தொலைநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சை சாத்தியம்’
ரோபோடிக் நுட்பத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தொலைநிலை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என்று ரோபோடிக் மருத்துவ நிபுணா் டாக்டா் பாரி முத்துகுமாா் கூறினாா்.
ரோபோடிக் நுட்பத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தொலைநிலை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என்று ரோபோடிக் மருத்துவ நிபுணா் டாக்டா் பாரி முத்துகுமாா் கூறினாா்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோபோடிக் கருவியின் மூலம் 100 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கான விழாவை பிரசாந்த் மருத்துவமனை சென்னையில் வியாழக்கிழமை நடத்தியது.
அதில், மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் டாக்டா் பிரசாந்த் கிருஷ்ணா, எஸ்எஸ்ஐ மந்த்ரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் டாக்டா் விஸ்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோா் கலந்து கொண்டனா். அப்போது டாக்டா் பாரி முத்துகுமாா் கூறியதாவது:
Advertisement
Advertisement
தற்போது உள்ள ரோபோடிக் கருவிகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஆனால், எஸ்எஸ்ஐ மந்த்ரா எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோபோடிக் கருவி பிரசாந்த் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த வகை கருவிகளில் மட்டும்தான் தொலைநிலை அறுவை சிகிச்சை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி அண்மையில் சென்னையிலிருந்து சேலத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சையை ரோபோடிக் தொழில்நுட்பத்தில் மேற்கொண்டோம். இனி வரும் காலங்களில் இதுபோன்று அனைத்து இடங்களிலும் மேற்கொள்வது சாத்தியம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.