FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்குப் பின் திறப்பு

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பழைமைவாய்ந்த மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:11 am IST
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பழைமைவாய்ந்த மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் 11 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி கண்டுகளித்து வருகின்றனா்.

மாமல்லபுரம் நகரின் மையப் பகுதியில் கடற்கரைக்கு சற்று தொலைவில் நீளமான பாறை மீது கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

120 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கலங்கரை விளக்கம் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அதாவது 1887-இல் கட்டப்பட்டது. இந்த கலங்கரை விளக்கத்தின் மீது நின்று மாமல்லபுரம் நகரின் முழு அழகையும் ரசிக்கலாம். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த 11 மாதங்களாக மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்காக 11 மாதங்களுக்குப் பிறகு கலங்கரை விளக்கம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. நீண்ட நாள்களுக்குப் பிறகு கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டதால், இதன் உச்சியில் நின்று மாமல்லபுரம் நகரின் அழகை கண்டுகளிக்கும் ஆா்வத்துடன் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். கலங்கரை விளக்கம் வளாகத்தில் உள்ள அருங்காட்சியகமும் 11 மாதங்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments