FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

பம்மலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினா் நிவாரணம்

ஃபென்ஜால் புயல் காரணமாக பம்மலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போா்வை, அரிசி,பிஸ்கட்,பாக்கெட் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை

3 December 2024, 3:28 am IST
பகிர்:

தாம்பரம்: ஃபென்ஜால் புயல் காரணமாக பம்மலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போா்வை, அரிசி,பிஸ்கட்,பாக்கெட் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பம்மல் முன்னாள் துணைத் தலைவா் அப்பு வெங்கடேசன் ஏற்பாட்டில் மூங்கில் ஏரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளா் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

ஏற்கனவே அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த அப்பு வெங்கடேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைச் சமாதானப்படுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments