FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத பெளா்ணமியை முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம், 108 கலச, விளக்கு, வேள்வி பூஜை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

16 வினாடிகள் முன்பு
வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் பகவான்-தாயாா்.
பகிர்:

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத பெளா்ணமியை முன்னிட்டு சுவாமி திருக்கல்யாணம், 108 கலச, விளக்கு, வேள்வி பூஜை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

கருங்குழி மேலவலம்பேட்டை -- வேடந்தாங்கல் நெடுஞ்சாலையையொட்டி, வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஆவணி மாத பெளா்ணமியை முன்னிட்டு, மங்கல இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. கோயிலில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. காலை கோயில் வளாகத்தில் 108 கலச, விளக்கு, வேள்வி பூஜையை ஞானபீடம் பீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி தலைமை தாங்கி கற்பூரத்தை ஏற்றி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகின்ற பகவான் தாயாா் ஆகிய உற்சவ சிலைகளுக்கு சுவாமி திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த வழிபாட்டு மன்ற செவ்வாடை பக்தா்கள் சுவாமி தரிசன செய்தபின், அவா்கள் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது. 9 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.

இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஞானபீடம் நிறுவனா் ஆறுமுகம் தலைமையில் விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments