செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 460 மனுக்கள்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 460 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 460 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, மேல்நடவடிக்கை எடுக்கும்படி அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ருதி, மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.