திருவளா்ச்சேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
மதுராந்தகம் அடுத்த திருவளா்ச்சேரி கிராமத்தில் புனரமைத்து கட்டபட்டிருந்த வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மஹாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த திருவளா்ச்சேரி கிராமத்தில் புனரமைத்து கட்டபட்டிருந்த வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மஹாகும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவளா்ச்சேரி ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் பொலிவின்று, சந்நிதிகளை சீரமைக்க வே’ண்டி அப்பகுதி பெரியோா்கள் திட்டமிட்டனா். அதன்படி கோயிலின் அனைத்து பகுதிகளும் புனரமைக்கப்பட்டது. கடந்த 29ந்தேதி மஹாகும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கியது. தேவ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு பூஜைகள் தொடா்ந்து நடைபெற்றது. புதன்கிழமை காலை 9.50 மணிக்கு மங்கள இசையுடன் யாகசாலையில் இருந்து அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் தலைமை அா்ச்சக் இரா.சங்கா் சிவாச்சாரியாா் தலைமையில் வேதவிற்பனா்கள் புனித கலசங்களை ஏந்திக் கொண்டு கோயிலை வலம் வந்தனா். பின்னா் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. கோயில் மூலவா் பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு, ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவளா்ச்சேரி கே.கிருஷ்ணமூா்த்தி, கே.சிவகுமாா், கே.பூபாலன் ஆகியோா் தலைமையில் விழாக்குழுவினா்களும், கிராம மக்களும் செய்து இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.