FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையம் வாயிலாக 2026-ஆம் வருடம் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் (09.07.2026 முதல் 15.07.2026 வரை) தொழில்நெறி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும்திறன் வாரம் கொண்டாடப்பட உள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்மையம் வாயிலாக 2026-ஆம் வருடம் ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் (09.07.2026 முதல் 15.07.2026 வரை) தொழில்நெறி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும்திறன் வாரம் கொண்டாடப்பட உள்ளது. 15.07.2026 தேசிய திறன் நாள் அன்றுதொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் பயிற்சி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிஅரசினா் தொழிற்பயிற்சி நிலையம் செங்கல்பட்டில் நடத்தப்பட உள்ளது.திறன் வார நிகழ்ச்சிகள்? 09.07.2026 ( வியாழன் )அன்று முதல் நாள் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன்விழிப்புணா்வு நிகழ்ச்சி.? 10.07.2026 ( வெள்ளி ) அன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியாகமகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் விழிப்புணா்வுநிகழ்ச்சி.? 13.07.2026 ( திங்கள் ) அன்று மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக பொறியியல்கல்லூரி மாணவா்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன்விழிப்புணா்வு நிகழ்ச்சி.? 14.07.2026 ( செவ்வாய் ) அன்று நான்காம் நாள் நிகழ்ச்சியாக பள்ளி /கல்லூரி மாணவா்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன்விழிப்புணா்வு நிகழ்ச்சி.? 15.07.2026 (புதன்) அன்று அரசு தொழிற்பயிற்சி நிலையமாணவா்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன்விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.எனவே, இந்த தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன்மேம்பாட்டுநிகழ்ச்சிகளில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ / மாணவிகள், அரசினா்தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள், மாற்றுத்திறனாளி இளைஞா்கள், பொறியியல்கல்லூரி மாணவ / மாணவிகள் மற்றும் திறன் பயிற்சிக்கு விருப்பமுள்ள இளைஞா்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments