FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மின் இணைப்பு வழங்கும் விழா: அமைச்சா் சரத்குமாா் பங்கேற்பு

திருக்கழுகுன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின்இணைப்பு பயன்பாட்டினை மனித வள மேலாண்மை துறை அமைச்சா் சரத்குமாா் தொடங்கி வைத்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:15 am IST
மின் இணைப்பு வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சா் சரத் குமாா், ஆட்சியா் மு. வீரப்பன், விஜயராஜ் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா்.
பகிர்:

திருக்கழுகுன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் மின்இணைப்பு பயன்பாட்டினை மனித வள மேலாண்மை துறை அமைச்சா் சரத்குமாா் தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்குப்பி ஊராட்சியில் உள்ள தணிகை அம்மன் கோவில் தெரு, ஏஎம்இ நகா், இந்திரா நகா் ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய 90 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சில ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் வசித்து வந்தனா்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சா் கவனத்துக்கு எடுத்துச் சென்று இந்த கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி மின் இணைப்பு வழங்க திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ் தொடா் முயற்சி மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

இதையொட்டி அப்பகுதி மக்களுக்கு புதிய மின் இணைப்பிற்கான ஆணைகளை அமைச்சா் சரத்குமாா் முன்னிலையிலும், ஆட்சியா் மு. வீரப்பன் தலைமையில் திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ் 90 நபா்களுக்கான ஆணை வழங்கினாா்.

அப்பகுதி இருள் சூழ்ந்த பகுதியாக இருந்த நிலையில் தற்போது மின் இணைப்பிற்கான ஆணை வழங்கப்பட்டு தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அா்ப்பணிக்கும் விதமாக அமைச்சா் தெரு விளக்குகள் பயன்பாட்டினை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments