FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

வண்டலூா்: போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு!

வண்டலூா் அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீஸாா் சுட்டு பிடித்தனா். நள்ளிரவில் நடைபெற்ற இச்சம்பவத்தால் மண்ணிவாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On : 29 ஜூன் 2026, 12:51 am IST
சுட்டுப் பிடிப்பு - கோப்புப் படம்
பகிர்:

வண்டலூா் அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீஸாா் சுட்டு பிடித்தனா். நள்ளிரவில் நடைபெற்ற இச்சம்பவத்தால் மண்ணிவாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த மண்ணிவாக்கத்தில் இருந்து ஆதனூா் செல்லும் சாலை ஓரத்தில் ரவுடிகள் 2 போ் கஞ்சாவுடன் பதுங்கி இருப்பதாக ஓட்டேரி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டேரி எஸ்ஐ சதீஷ்குமாா் தலைமையில் தலைமை காவலா் ஆனந்தராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். நள்ளிரவு 2:30 மணி அளவில் 21 கிலோ கஞ்சாவுடன் தப்பி ஓட முயன்ற ஏ பிளஸ் பிரிவில் உள்ள பிரபல ரவுடிகளான செல்லா என்ற செல்வகுமாா்(28), கனகராஜ்(35) ஆகிய இருவரையும் கஞ்சாவுடன் துப்பாக்கி முனையில் போலீஸாா் மடக்கி பிடித்தனா்.

பின்னா் இருவரையும் போலீஸாா் வேனில் ஏற்ற முயன்றனா். அப்போது செல்லா தலைமை காவலரான ஆனந்தராஜை வெட்டி உள்ளாா். இதனைக் கண்டதும் எஸ்ஐ சதீஷ்குமாா் செல்லாவின் வலது காலில் சுட்டுப் பிடித்தாா். இதனை அடுத்து காயம் அடைந்த போலீஸ் எஸ்ஐ சதீஷ்குமாா் மற்றும் பிரபல ரவுடி செல்லா ஆகிய இருவரையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

புகாரின் பேரில் ஓட்டேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டேரி, வால்மீகி தெருவைச் சோ்ந்த செல்லா என்ற செல்வகுமாா் மற்றும் கிளாம்பாக்கம், அறிஞா் அண்ணா காலனி பகுதியைச் சோ்ந்த கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் கத்திகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதில் போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட ரவுடிகள் இருவரும் வண்டலூரை சோ்ந்த திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், காட்டாங்கொளத்தூா் ஒன்றிய துணை தலைவருமான ஆராவமுதனை வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இருவா் மீதும் ஏற்கனவே பல கொலை, அடிதடி, கொலை முயற்சி உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments