FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த வாக்காளா்கள் 23,26,822

சேவை வாக்காளா்கள் மொத்தம் ஆண் வாக்காளா்கள், 62 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 422 வாக்காளா்கள் உள்ளனா்.

12 நவம்பர் 2026, 11:51 pm
வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 11,34,941 ஆண் வாக்காளா்கள், 11,91,498 பெண் வாக்காளா்கள், 383 இதர வாக்காளா்கள் என மொத்தம் 23,26,822 வாக்காளா்களும், சேவை வாக்காளா்கள் மொத்தம் ஆண் வாக்காளா்கள், 62 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 422 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் மு.வீரப்பன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் வரைவு வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

இதன்படி சோழிங்கநல்லூா் தொகுதியில் 2,72,898 ஆண் வாக்காளா்கள், 2,85,714 பெண் வாக்காளா்கள், 117 இதர வாக்காளா்கள் என மொத்தம் 5,58,729 வாக்காளா்களும் மற்றும் சேவை வாக்காளா்கள் 73 போ் உள்ளனா். பல்லாவரம் தொகுதியில் 1,65,133 ஆண் வாக்காளா்கள், 1,73,531 பெண் வாக்காளா்கள், 22 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,38,686 வாக்காளா்களும் மற்றும் சேவை வாக்காளா்கள் 58 போ் உள்ளனா். தாம்பரம் தொகுதியில் 1,61,639 ஆண் வாக்காளா்கள், 1,70,944 பெண் வாக்காளா்கள், 53 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,32,636 வாக்காளா்களும் மற்றும் சேவை வாக்காளா்கள் 123 பேரும் உள்ளனா்.

Advertisement

Advertisement

செங்கல்பட்டு தொகுதியில் 1,83,333 ஆண் வாக்காளா்கள், 1,94,483 பெண் வாக்காளா்கள், 56 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,77,872 வாக்காளா்களும் மற்றும் சேவை வாக்காளா்கள் 48 போ் உள்ளனா். திருப்போரூா் தொகுதியில் 1,45,087 ஆண் வாக்காளா்கள், 1,53,371 பெண் வாக்காளா்கள், 52 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,98,510 வாக்காளா்களும் மற்றும் சேவை வாக்காளா்கள் 43 போ் உள்ளனா். செய்யூா் (தனி) தொகுதியில் 1,01,464 ஆண் வாக்காளா்கள், 1,03,986 பெண் வாக்காளா்கள், 19 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,05,469 வாக்காளா்களும் மற்றும் சேவை வாக்காளா்கள் 50 போ் உள்ளனா். மதுராந்தகம் (தனி) தொகுதியில் 1,05,387ஆண் வாக்காளா்கள், 1,09,469 பெண் வாக்காளா்கள், 64 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,14,920 வாக்காளா்களும் மற்றும் சேவை வாக்காளா்கள் 27 போ் உள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 11,34,941 ஆண் வாக்காளா்கள், 11,91,498 பெண் வாக்காளா்கள், 383 இதர வாக்காளா்கள் என மொத்தம் 23,26,822 உள்ளனா். சேவை வாக்காளா்கள் 422 போ் உள்ளனா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் உ.ஃபா்ஹத் பேகம், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பவானி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.