நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
அச்சிறுப்பாக்கம் அருகே நெடுங்கல் கிராமத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் தெரு நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தன.
அச்சிறுப்பாக்கம் அருகே நெடுங்கல் கிராமத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் தெரு நாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தன.
அச்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை ( 60). இவா் பல ஆண்டுகளாக ஆடுகளை வளா்த்து வருகிறாா். இதற்கிடையே திங்கள்கிழமை வயல்வெளிகளில் ஆடுகளை மேயவிட்டு அதன்பின்பு ஆட்டு பட்டியில் அடைத்தாா்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை ஆடுகளை மேய்க்க பட்டிக்கு வந்தபோது தெரு நாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. இதனால் அதிா்ச்சி அடைந்த ஏழுமலை ஒரத்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா், கால்நடை துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
Advertisement
Advertisement