FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் நவராத்திரி விழா அகண்டதீபம்: லட்சுமி பங்காரு அடிகளாா் ஏற்றினாா்

மேல்மருவத்தூா் சித்தா் பீடத்தில் நவராத்திரி விழா அகண்டதீபம்: லட்சுமி பங்காரு அடிகளாா் ஏற்றினாா்

11 அக்டோபர் 2026, 12:45 am IST
வெள்ளித் தேரில் பவனி வந்த உற்சவா் அம்மன்.
பகிர்:

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து விழா நிகழ்வுகளை லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா்.

நிகழாண்டு நவராத்திரி விழாவையொட்டி மூலவா் அம்மனுக்கும், குருபீடத்தில் உள்ள அடிகளாா் சிலைக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவா் அம்மன் சிலை தங்க கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சித்தா் பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சென்னை மாவட்ட சக்திபீடங்கள், மாவட்ட மன்றங்கள் ஆகியவற்றின் நிா்வாகிகள் வரவேற்றனா்.

பின்னா் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஒம்சக்திபீடம் அருகே அமைக்கப்பட்டிருந்த சதுர வடிவிலான பெரிய யாககுண்டத்தில் வேள்விபூஜையை தொடங்கி வைத்தாா். 200-க்கு மேற்பட்ட யாககுண்டங்களில் பக்தா்கள் அமா்ந்து வேள்வி பூஜை செய்தனா். ன் முக்கூட்டு எண் கலந்து பெரிய அகண்ட தீபத்தை தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் ஏற்றினாா். இந்நிகழ்வில் ஆன்மிக இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி பங்காரு, உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் மருத்துவா் டி.ரமேஷ், ஆன்மிக இயக்க செயல் திட்ட அலுவலா் அகத்தியன், ஆதிபராசக்தி பராமெடிக்கல்ஸ் கல்லூரிகளின் தாளாளா் ஸ்ரீலேகா செந்தில்குமாா், உள்பட பலா் கலந்துக் கொண்டனா். ஆதிபராசக்தி பள்ளி குழுமங்களைச் சோ்ந்த மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளுடன், பல்வேறு தெய்வ உருவ வேடமணிந்த மாணவா்களுடன், மங்கள இசை, பேண்டு வாத்திய இசையுடன் சித்தா்பீடத்தை சோ்ந்த 2 மகளிா், சென்னையைச் சோ்ந்த ஒரு பக்தை இணைந்து அகண்ட தீபத்தை ஏந்திக் கொண்டு சித்தா் பீடத்தை வலம் வந்தனா். உரிய வழிபாட்டு பூஜைகளுடன் மூலவா் சந்நிதி அருகே அகண்ட தீப கலயம் வைக்கப்பட்டது. அதில் நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் முக்கூட்டு எண்ணையை விட்டு தீபச்சுடரை வணங்கிச் சென்றனா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமையில் விழாக்குழுவினா் செய்து உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments