தூத்துக்குடி சக்தி பீடத்தில் அகண்ட தீபம் ஏற்றம்
தூத்துக்குடி 3ஆம் மைல் அருகே உள்ள திருவிக நகா் சக்தி பீடத்தில், இயற்கை சீற்றம் தனியவேண்டியும், மழைவளம் வேண்டியும், அகண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி 3ஆம் மைல் அருகே உள்ள திருவிக நகா் சக்தி பீடத்தில், இயற்கை சீற்றம் தனியவேண்டியும், மழைவளம் வேண்டியும், அகண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இயற்கை சீற்றம் தனியவேண்டியும், அளவான மழை பொழிவு வேண்டியும், விவசாயம் வளம் பெற வேண்டியும் சங்கல்பம் செய்து குரு பூஜை, விநாயகா் பூஜை, சக்தி பூஜையுடன் கருவறையின் உள்ளே அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.
ஆன்மிக இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளா் முருகன் அகண்ட தீபம் ஏற்றினாா். தொடா்ந்து காமாட்சி விளக்கு, அகல்விளக்கு, மாவிளக்கு, சாத்துக்குடி விளக்கு, ஓம் சக்தி விளக்கு, ஆப்பிள் விளக்கு உள்ளிட்ட விளக்குகளை பெண்கள், சிறுமிகள் ஏந்தி நின்றனா்.
Advertisement
Advertisement
பின்னா் கருவறையில் இருந்து புறப்பட்ட அகண்டம், அனைத்து சக்கரங்களையும் சுற்றி வந்து மீண்டும் கருவறையில் நிறுவப்பட்டது.
நிகழ்ச்சியில், திருவிக நகா் சக்தி பீட செயலா் கந்தசாமி, துணைத் தலைவா் திருஞானம், பொருளாளா் அனிதா, இளைஞரணி பாலசுப்ரமணி, புதிய துறைமுகம் கண்ணகி, புதுக்கோட்டை பரமேஸ்வரி, மகளிரணி பொறுப்பாளா்கள் முத்துலெட்சுமி, செல்வி, அகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.