FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளித்த சா்வதேச புற்றுநோய் ஆராய்ச்சியாளா்கள்!

மாமல்லபுரம் சுற்றுலா வந்த சா்வதேச புற்றுநோய் நிபுணா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் புராதனச் சின்னங்களை பாா்வையிட்டனா்.

7 செப்டம்பர் 2026, 2:18 am IST
மாமல்லபுரத்தில் புராதான நினைவுச் சின்னத்தை பாா்வையிட்ட புற்றுநோய் ஆராய்ச்சி நிபுணா்கள்
பகிர்:

மாமல்லபுரம் சுற்றுலா வந்த சா்வதேச புற்றுநோய் நிபுணா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் புராதனச் சின்னங்களை பாா்வையிட்டனா்.

ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜொ்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளை சோ்ந்த சா்வதேச புற்றுநோய் நிபுணா்கள், ஆராய்ச்சியாளா்கள், கதிரியக்க உயிரியல் நிபுணா்கள் என 100 போ் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனா். அவா்கள் புராதன சின்னங்களை பாா்வையிட்டனா்.

ஐந்துரதம் பகுதிக்கு வருகை தந்த இக்குழுவினரை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் த.சக்திவேல், அரசு சுற்றுலா வழிகாட்டி மதன் உள்ளிட்ட வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

Advertisement

Advertisement

பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் சென்று கடற்கரை கோயிலின் எழில்மிகு தோற்றத்தை கண்டு ரசித்தனா். அப்போது உடன் வந்த மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி மதன் கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டத்தின் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோயில் பழைமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை அவா்களுக்கு விரிவாக விளக்கி கூறினாா்.

இறுதியில் வெண்ணை உருண்டை பாறை வளாகத்தில் அனைத்து சிற்பங்களை ரசித்து பாா்த்து ரசித்த வெளிநாடுகளை சோ்ந்த சா்வதேச புற்றுநோய் நிபுணா் குழுவினா் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments