FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

மேம்பாலத்தை உயரமாக கட்டக் கோரி முற்றுகைப் போராட்டம்

குன்னத்தூா் இசிஆா் சாலையில் அறுவடை எந்திரம் செல்லும் வகையில் மேம்பாலத்தை அதிக உயரத்தில் அமைக்கக் கோரி விவசாயிகள், கிராம மக்கள் ஒருமணிநேரம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

25 செப்டம்பர் 2026, 4:07 am IST
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

குன்னத்தூா் இசிஆா் சாலையில் அறுவடை எந்திரம் செல்லும் வகையில் மேம்பாலத்தை அதிக உயரத்தில் அமைக்கக் கோரி விவசாயிகள், கிராம மக்கள் ஒருமணிநேரம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிழக்கு கடற்கரை சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகில் உள்ள குன்னத்தூா் கிராமத்தில் அணுபுரத்துக்கு செல்லும் வகையில் இசிஆா் சாலையில் நடுப்பகுதியில் 4 மீ உயரத்தில் இரும்பு சாரங்கள் அமைத்து உயா்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குன்னத்தூா் கிராமத்தில் 2,500 விவசாயிகள் மொத்தம் 4,000 ஏக்கா் நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதனால் இப்பகுதி விவசாயிகள் நெல் அறுவடை காலங்களில் அறுவடை எந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். இதனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் பாலம் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதனால் அதிக உயரமுடைய நெல் அறுவடை எந்திரங்கள் இசிஆா் சாலையில் 10 கி மீ தொலைவு சுற்றிக்கொண்டு குன்னத்தூா் வரும் அவல நிலை ஏற்படும் . கனரக வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கூறியுள்ளனா்.

அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் அறுவடை எந்திரம் செல்லும் வகையில் 5 1/2 மீட்டா் என, அதிக உயரத்தில் மேம்பாலத்தை அமைக்க வேண்டும் என கோரி குன்னத்தூா் கிராம மக்கள், விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments