எழுத்தாளர் பி.வி. கிரி காலமானார்
சென்னை, நவ.10: எழுத்தாளர், இலக்கியமாமணி பி.வி. கிரி (71) சென்னையில் திங்கள்கிழமை (நவ.9) மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர். பி.வி. கிரி, தமிழக அரசின் "தமிழரசு' இதழில் 25 ஆண்டுகள் உ
சென்னை, நவ.10: எழுத்தாளர், இலக்கியமாமணி பி.வி. கிரி (71) சென்னையில் திங்கள்கிழமை (நவ.9) மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர். பி.வி. கிரி, தமிழக அரசின் "தமிழரசு' இதழில் 25 ஆண்டுகள் உதவி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
எழுபது புத்தகங்களை எழுதிய பி.வி.கிரியின் "இதழியல்' நூல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக பல பாடல் நூல்களை எழுதியுள்ளார். இவருடைய "வேதநாயகரின் காலப்பெட்டகம்' கட்டுரை நவம்பர் 8-ம் தேதி தினமணி "தமிழ்மணி'யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 044 26283633
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.